கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை அசுர வேகத்தில் ஏறி கொண்டே செல்கிறது. இதை கண்டித்து அனைத்து கட்சியினரும் ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு, சாலை நடத்தி வருகின்றனர். ஆனால், அதை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. 

இந்நிலையில் இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. மகாராஷ்டிரா மாநிலம் பர்பஹானி மாவட்டத்தில் பெட்ரோல் விலை இன்று ரூ.90-க்கு உயர்த்தப்பட்டுவிட்டது. இந்த விலை உயர்வு இந்தியாவில் அதிகப்படியான விலை என்று கூறப்படுகிறது. 

இப்படியே அசுர வேகத்தில் பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருந்தால் மீண்டும் பழைய நிலைமைக்கே போகவேண்டியதாக இருக்கும். மாட்டு வண்டியில் பயணம் செய்யலாம் என்றால் கூட இப்போது மாட்டு வண்டிகள் கூட கிடையாது. எனவே மீண்டும் சைக்கிளை பயன்படுத்தலாம் என்ற நிலை வந்துள்ளது. பெட்ரோல், டீசல் இந்த விலையேற்றதால் வாகனம் வைத்திருக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்படட 20 எதிர்க்கட்சிகள் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தின என்பது குறிப்பிடத்தக்கது.