Asianet News TamilAsianet News Tamil

கடுமையாக உயரப் போகுது பெட்ரோல், டீசல் விலை ! லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா ?

சவுதி அரேபியாவில் உள்ள  எண்ணெய் கிணறுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

petrol diesel price will be hike
Author
Delhi, First Published Sep 18, 2019, 8:22 AM IST

சவுதியில் அரசுக்கு சொந்தமான அரம்கோ நிறுவனத்திற்கு  சொந்தமான அபெக் மற்றும் குர்அய்ஸ் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலை  ஈரான் நாடே திட்டமிட்டு நடத்தியதாக அமெரிகக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால்  நாள் ஒன்றுக்கு  5.7 மில்லியன் பேரல் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது. ஒரு பீப்பாயின் விலை பத்து டாரல்கள் அதிகரித்தால், இந்தியாவுக்கு ஆண்டு ஒன்றுக்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு செலவு அதிகரிக்கும். 

petrol diesel price will be hike

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாகுறையும் புள்ளி 5 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே தள்ளாட்டத்தில் இருக்கும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் மேலும் சுணக்கம் ஏற்படும் என்ற அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணிகளால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் சரிவு காணப்படுகிறது..  

petrol diesel price will be hike

இந்நிலையில் இந்தியாவிடம் 12 நாட்களுக்கான கச்சா எண்ணெய் கையிருப்பு இருப்பதால், கச்சா எண்ணெய் இருப்பு குறையும் போது தான் பெட்ரோல் டீசல் விலையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அதற்குள் சர்வதேச நிலவரங்கள் சரி செய்யப்பட்டுவிடும் என்று நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கும் இப்பிரச்சனை சரி செய்யப்படவிலை எனில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios