பீகாரில் பா.ஜனதா, ஐக்கியஜனதா தளம் கூட்டணியில் மீண்டும் முதல்வராகநிதிஷ்குமார் பதவி ஏற்று இருப்பதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ. சரோஜ் யாதவ், சந்தர் வர்மா ஒரு மனுவும்,சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ஜிதேந்திர குமாரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்துள்ளனர். அவர் தாக்கல் செய்த மனுவில், “ சட்டசபையில் தனிப்பெருங்கட்சியாக இருக்கும் ராஷ்ட்ரியஜனதா தளத்தை ஆட்சி அமைக்க அழைக்காமல்நிதிஷ்குமாரை ஆட்சி அழைக்க ஆளுநர் அழைத்ததை செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேணன், நீதிபதி ஏ.கே. உபாத்யாயேஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் லலித் கிஷோர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.டி.சஞ்சய் ஆகியோர் வாதிடுகையில், “ இந்த மனு முக்கியத்துவம் இல்லாதது’’ என்றனர்.

இதை கேட்ட நீதிபதிகள் இந்த மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுப்பதாக தெரிவித்தனர்.