சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் தெலுங்கு டீசர் இணையத்தை கலக்கி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் தெலுங்கு டீசர் இணையத்தை கலக்கி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவாவின் கை வண்ணத்தில் அண்ணாத்த படம் உருவாகி வருகிறது. சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. டி இமான் இசையில், இயக்குநர் சிவாவின் திட்டமிடல் காரணமாக படப்பிடிப்பு முடிந்துள்ளது.

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் ரிலீசாகிறது. படத்தின் தமிழ் டீசர் கடந்த 14ம் தேதி வெளியானது.

இந்நிலையில் அண்ணாத்த தெலுங்கு பட டீசர் இன்று வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் இப்படத்துக்கு பெத்தண்ணா என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

டீசர் வெளியான நிமிடங்களிலேயே அதிக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. 1.44 நிமிடம் ஓடும் இந்த டீசர் நிச்சயம் ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கிறது.

Scroll to load tweet…