Asianet News TamilAsianet News Tamil

வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய மீனவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன கேரள மக்கள் …கையெடுத்து வணங்கி வழியனுப்பிய நெகிழ்ச்சி சம்பவம் !!

கடும் வெள்ளத்தில் சிக்கிய கேரள மக்களை எந்தவித எதிர்பர்ப்பும் இல்லாமல் தங்களது படகுகளை கொண்டு வந்து காப்பாற்றிய மீனவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி சொன்ன பொது மக்கள்  அவர்களை கைகூப்பி வணங்கி வழியனுப்பி வைத்தனர்.

People who recue fromm flood by fishermen thanks to them
Author
Chennai, First Published Aug 21, 2018, 9:38 AM IST

கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில், தென்மேற்கு பருவமழை நூறாண்டுகளில் இல்லாத அளவுக்குகொட்டி தீர்த்தது. . தொடர் மழையால்மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது. கேரளாவின் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், 40 சதவீதம் பேர்வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

People who recue fromm flood by fishermen thanks to them

ராணுவம், கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, கடலோர காவல் படை, துணை ராணுவப் படைவீரர்கள் மீட்புப் பணிகளில்ஈடுபட்டுள்ளனர்.  மாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள்மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் அவர்களுடன் சேர்ந்து பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட கடலோரப்பகுதி மீனவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். எந்தவிதமான சுயநலமும் பாராமல் தங்களிடம் இருக்கும் படகுகளைக் கொண்டு வந்து வெள்ள நீரில் சிக்கி இருக்கும் மக்களை மீட்டடனர்.

People who recue fromm flood by fishermen thanks to them

மீனவர்களது சேவையைப் பாராட்டிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவர்கள் கேரளாவின் ராணுவ வீரர்கள் என பாராட்டி ஊக்கத்தொகை அறிவித்தார்.ஆனால் அதை ஏற்க மறுத்த மீனவர்கள், எங்களின் சகோதர, சகோதரிகளைக் காப்பாற்றுவதும், சக மனிதர்களை காப்பதும் எங்களின் கடமை என்று தெரிவித்தனர்..

மக்களின் உயிரைக் காக்கும் பணிக்கு எங்களுக்கு பணம் வேண்டாம் என்று மீனவர்கள் மறுத்துள்ள சம்பவத்தை  முதலமைச்சர் பினராயி விஜயன் பாராட்டினார்.

People who recue fromm flood by fishermen thanks to them

இந்நிலையில் மீட்புப்ணிகளை முடித்துக் கொண்ட மீனவர்கள் தாங்கள் கொண்டு வந்த படகுகளை லாரிகளில் ஏற்றிக் கொண்டு தங்களது சொந்த இடங்களுக்குத் திருப்பினர். அவர்கள் அனைவரையும் பொது மக்கள் கண்ணிர் மல்க நன்றி தெரிவித்தனர்.

அங்கிருந்த பொது மக்கள் மீனவர்களை நோக்கி தங்கள் இரு கரங்களையும் கூப்பி வழி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம், அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

Follow Us:
Download App:
  • android
  • ios