Dark Tourism |மக்களே பேரிடர் பகுதிக்கு வர வேண்டாம்!-'டார்க் டூரிசம்' ஆக அறிவித்து கேரளா காவல்துறை எச்சரிக்கை!!
வயநாடு நிலச்சரிவு பேரிடரைத் தொடர்ந்து, அங்கு டார்க் டூரிசம் அதிகரித்துள்ளது. இதற்கு காவல்துறை வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். அது என்ன டார்க் டூரிசம்? தெரியுமா உங்களுக்கு?
சமீபத்திய ஆண்டுகளில் டார்க் டூரிசம் உலகளாவிய அளவில் கவனம் பெற்று வருகிறது. செர்னோபில் மற்றும் தி டார்க் டூரிஸ்ட் போன்ற டிவி நிகழ்ச்சிகளே இதற்கு காரணம்.
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலச்சரிவுகளில் மேட்டுப்பட்டி, சூரல்மலை மற்றும் முண்டக்கை ஆகிய கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இந்தப் பேரழிவில் சிக்கி 200க்கும் அதிகமோனார் உயிரிழந்துள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிலச்சரிவில் சிக்கிய மேலும் பலரை மீட்கும் முயற்சியில் தேசிய மற்றும் மாநில மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பேரிடர் பகுதியை "இருண்ட சுற்றுலா" ஆக அறிவித்து கேரள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்களே, "தயவுசெய்து, பேரிடர் பகுதிகளுக்குப் பார்வையிடச் செல்ல வேண்டாம். அது மீட்புப் பணிகளைப் பாதிக்கும். ஏதேனும் உதவி தேவைப்படின் 112 என்ற எண்ணை அழைக்கவும்" என்று எக்ஸில் தளத்தில் பதிவிட்டுள்ளது
வயநாட்டில் இயற்கையின் கோர தாண்டவம்; மரண ஓலம்; விளக்கும் புகைப்படங்கள்!!
Dark Tourism என்றால் என்ன?
"டார்க் டூரிசம்", சமீபத்திய ஆண்டுகளில் கவனம் பெற்று வருகிறது. செர்னோபில் மற்றும் தி டார்க் டூரிஸ்ட் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
டார்க் டூரிசம் என்பது மரணம், துன்பம், சோகம், வன்முறை அல்லது அசாதாரண இடங்கள், நிகழ்வுகளுடன் தொடர்புடைய தளங்களுக்குச் சென்று பார்வையிடுவதாகும்.
அவை, கல்லறைகள், மயானங்கள், சவக்கிடங்குகள், பேரிடர் மண்டலங்கள், போர்க்களங்கள், நினைவுச் சின்னங்கள், சிறைச்சாலைகள், மரணதண்டனை அளிக்கப்படும் இடங்கள் போன்றவை அடங்கும்.
Wayanad : வயநாடு கொடூரத்தை காட்டிய வைரல் புகைப்படம்.! இந்த 3 பேரும் உயிரோடு உள்ளார்களா.? வெளியான ஷாக் தகவல்
Dark Tourist பிரபலமானது எப்படி?
பலருக்கும் மகிழ்ச்சியான நினைவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட, சோகமான நினைவுகள் ஏற்படுத்தும் தாக்கம் மிக அதிகம். டார்க் டூரிஸ்சம் போன்ற இடங்களை பார்வையிடுவதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம் மக்கள் கடந்த காலத்துடன் எளிதாக ஒன்றிணைகின்றனர்.