Asianet News TamilAsianet News Tamil

"அந்த வழக்கில் என்னை கேள்வி கேட்கனும்; என் மகனை அல்ல" வலையில் சிக்கும் சிதம்பரம்...

P.chidhambaram says CBI custody in Aircel Maxis case Ask me a question Not my son
P.chidhambaram says CBI custody in Aircel Maxi's case Ask me a question; Not my son
Author
First Published Sep 15, 2017, 4:08 PM IST


ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கல் சி.பி.ஐ. தவறான தகவல்களை பரப்பி வருகிறது. ஏதேனும் கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்னை கேட்க வேண்டும், என் மகனை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு நடந்த ஏர்செல் மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி பெற்றுத் தந்தது  தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திசிதம்பரத்தின் நிறுவனம் ஆதாயம் பெற்றதாக சி.பி.ஐ. குற்றம்சாட்டுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால், சி.பி.ஐ. முன் விசாரணைக்கு ஆஜராக கார்த்தி சிதம்பரம் மறுத்தவிட்டார். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்து, விசாரணையையும் முடித்துவிட்டது. அப்படி இருக்கும் போது, இந்த வழக்கில் மீண்டும் சி.பி.ஐ. என்னை விசாரிக்க முயல்வது முரண்பாடாக இருக்கிறது என்று தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளித்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்டரில்சி.பி.ஐ.க்கு கண்டனம் தெரிவித்து கருத்துக்கள் பதிவிட்டுள்ளார். அதில், “ ஏர்செல் மேக்சிஸ்வழக்கில், அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் பரிந்துரையின் அடிப்படையில் தான், நான் அதற்கு அனுமதி அளித்தேன். அப்படியானால், என்னிடம்தான் சி.பி.ஐ. கேள்வி கேட்க வேண்டும். எனது மகன் கார்த்தி சிதம்பரத்தை தொந்தரவு செய்யக்கூடாது.

சி.பி.ஐ. அமைப்பு தவறான தகவல்களை பரப்பிவருவது வருத்தமளிக்கிறது. ஏர்செல் மேக்சிஸ்வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் முன், அன்னிய முதலீடுமேம்பாட்டு வாரிய அதிகாரிகள் தனது வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். அதற்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios