Pathway of GST

1986, பிப்: 1986-87ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆட்சியில், நிதி அமைச்சராக இருந்த வி.பி.சிங் கலால் வரிவிதிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை முன்மொழிந்தார். இதுதான் ஜி.எஸ்.டி.க்கு முதல்படியாகும்.

2000: ஜி.எஸ்.டி. என்ற ஒரு வரி முறையை முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்அறிமுகப்படுத்தி, மேற்கு வங்காள நிதி அமைச்சர் அசிம் தாஸ் குப்தா தலைமையில் ஒரு குழு அமைத்தார்.

2004: நிதி அமைச்சகத்தின் ஆலோசகரான விஜய் கேல்கர், ஏற்கனவே இருக்கும் வரி முறைக்கு பதிலாக ஜி.எஸ்.டி. வரி அமைப்பை கொண்டு வர பரிந்துரைத்தார்.

2006, பிப்.28: காங்கிரஸ் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த சிதம்பரம் பட்ஜெட்டில்முதல்முறையாக ஜி.எஸ்.டி. என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.

2008, ஏப்.30: ஜி.எஸ்.டி.க்கான செயல்திட்டத்தை அதிகாரமிக்க நிதி அமைச்சர்கள் குழு அரசிடம் அளித்தது.

2009: முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஜி.எஸ்.டியின் அடிப்படை கட்டமைப்பை அறிவித்தார். அப்போது பா.ஜனதா கடுமையாக எதிர்த்தது.

2011, மார்ச்22: 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் அரசு, மக்களவையில் ஜி.எஸ்.டி. தொடர்பான அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்தது.

2013, பிப்: பட்ஜெட் உரையில், ஜி.எஸ்.டி.யை அறிமுகம் செய்த நிதி அமைச்சர் ப.சிதம்பரம், மாநிலங்களின் வருவாய் இழப்பீடாக ரூ.9 ஆயிரம் கோடி அளிக்கப்படும் என்றார்.

2013, அக்.: குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, ஜி.எஸ்.டி. மசோதாவை கடுமையாக எதிர்த்தார். மாநிலத்துக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்றார்.

2014: பா.ஜனதா தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன், நிலைக்குழுவில் இருந்த ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

2014, டிசம். 19: நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஜி.எஸ்.டி. மசோதாவை மக்களவை அறிமுகம் செய்தார். 

2015, பிப்: 2016, ஏப்.1 ந்தேதி ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வரும் என ஜெட்லி அறிவித்தார்.

2015, மே: மக்களவை, மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி. அரசியலமைப்பு சட்டமசோதா நிறைவேறியது.

2016, செப்.2: 16 மாநிலங்களில் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது,ஜனாதிபதி பிரணாப்ஒப்புதல் அளித்தார்.

2016, செப்.12: முதல் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் நடத்த அமைச்சரவை ஒப்புதல்

2017, ஜன.16: ஜூலை 1-ந்தேதி ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்பைஜெட்லி வெளியிட்டார்.

2017, மார்.27: ஜி.எஸ்.டி.யின் அனைத்து பிரிவுகளுக்கும் மக்களவை, மாநிலங்கள் அவையில் ஒப்புதல் பெறப்பட்டது.

2017, மே 18: 1200 பொருட்களுக்கான வரி விதிப்பை ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவு செய்தது.

2017, ஜூன் 21: ஜம்மு காஷ்மீர் தவிர அனைத்து மாநிலங்களிலும் ஜி.எஸ்.டி. சட்டம் நிறைவேறியது.

2017, ஜூன் 29: காங்., இடதுசாரி, மம்தாபானர்ஜி ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக அறிவிப்பு.

2017, ஜூன் 30: நாட்டில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அறிமுகம்.