Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சிகளின் பலே பிளான்... மோடிக்கு ஆப்பு ரெடி!

உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிட்டல், அவரை எதிர்த்து பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

parliment election...Hardik patel pm modi Competition
Author
Uttar Pradesh, First Published Jan 20, 2019, 5:19 PM IST

உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிட்டல், அவரை எதிர்த்து பொதுவேட்பாளரை நிறுத்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த முறை குஜராத்தில் உள்ள வதோதரா, உ.பி.யில் உள்ள வாரணாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். இதில் வாரணாசி தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, வதோதரா தொகுதியை மோடி ராஜினாமா செய்துவிட்டார். இந்த முறை மீண்டும் வாரணாசி தொகுதியிலும் ஒடிஷாவில் உள்ள புரி தொகுதியிலும் போட்டியிடும் முடிவில் நரேந்திர மோடி இருப்பதாகக் கூறப்படுகிறது.

 parliment election...Hardik patel pm modi Competition

மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டால், அவருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவரை எதிர்த்து குஜராத்தைச் சேர்ந்த படேல் சமூகத் தலைவர் ஹர்த்திக் படேலை நிறுத்த சில கட்சிகள் திட்டம் வைத்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. குஜராத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது பாஜகவுக்கு ஓரளவு நெருக்கடியைக் கொடுத்தார் ஹர்த்திக் பட்டேல். parliment election...Hardik patel pm modi Competition

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து குஜராத்தில் பாஜகவுக்குக் கடும் போட்டியையும் இவர் கொடுத்தார். இதன் காரணமாக ஹர்த்திக் படேலை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஹர்த்திக் படேல் வாரணாசியில் போட்டியிட சம்மதித்தால் காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் அவருக்கு ஆதரவு அளிக்கவும் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகின்றன.parliment election...Hardik patel pm modi Competition

சில தினங்களுக்கு முன்பு வாரணாசி வந்த ஹர்த்திக் படேல், அந்தத் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்தார். தேர்தலில் போட்டியிடும் திட்டத்தில்தான் வாரணாசியில் அவர் மக்களைச் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios