Asianet News TamilAsianet News Tamil

தேர்தலில் தோற்றால் ராஜினாமா செய்ய தயார்... முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

பஞ்சாப்பில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அதிரடியாக அறிவித்துள்ளார். 

Parliment election...CM Amarinder Singh Will resign
Author
Punjab, First Published May 18, 2019, 1:27 PM IST

பஞ்சாப்பில் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அதிரடியாக அறிவித்துள்ளார். Parliment election...CM Amarinder Singh Will resign

பஞ்சாப் மாநிலத்தில் நாளை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனால் அரசியல் கட்சியினர் நேற்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப் மாநிலத்தில் 13 தொகுதிகளை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. Parliment election...CM Amarinder Singh Will resign

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. அம்மாநில அரசின் அமைச்சராக உள்ள நவ்ஜோத் சித்து பாஜகவுக்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் சித்து மனைவி அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், முதல்வருமான அமரிந்தர் சிங் சித்து மனைவிக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

 Parliment election...CM Amarinder Singh Will resign

இந்நிலையில் இதுகுறித்து "சித்து மனைவிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது பொய்யான குற்றச்சாட்டு. சித்துவின் மனைவி அமிர்தசரஸில் போட்டியிட மறுத்துவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தால் என் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அதிரடியாக கூறியுள்ளார். அதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்கிறேன். மாநில அமைச்சர்களும், வெற்றி, தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும்" என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios