இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எம்.பி.யாக இல்லாத ஒருவருக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எம்.பி.யாக இல்லாத ஒருவருக்கு நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக கருதப்படுகிறது. 
மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு அவை கூடியதும் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை வாசித்து இரங்கல் தெரிவித்தார். அவை ஒத்திவைப்பது தொடர்பாக பல்வேறு கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து ஒத்திவைத்தார். 
அதேபோல் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது குறித்தும், கருணாநிதி மறைவு குறித்தும் அறிவிக்கப்பட்டது. மக்களவையிலும் கருணாநிதி மறைவு குறித்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதன்பின் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.முன்னதாக திமுக தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செல்லும் விதமாக டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் பறக்கும் தேசியக்கொடியை அறை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
