Asianet News TamilAsianet News Tamil

Parag Agarwal: யார் இந்த பராக் அகர்வால்? இளம் வயதிலேயே இந்தியர் ஒருவர் டுவிட்டரின் சிஇஓவானது எப்படி?

சர்வதேச நிறுவனங்கள், முக்கியமாக அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓ உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாடெல்லா, கூகுள் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை, ஐபிஎம் உள்ளிட்ட மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓவாகவும் இந்தியர்களே உள்ளனர். 

Parag Agrawal becomes Twitter CEO.. Who is Parag Agrawal?
Author
Washington D.C., First Published Nov 30, 2021, 10:00 AM IST

பிரபல சமூக வலைதள நிறுவனமான டுவிட்டரின் சிஇஓ பதவியிலிருந்து ஜான் டோர்சி விலகியதையடுத்து புதிய தலைமை செயல் அதிகாரியாக  இந்தியாவை சேர்ந்த பராக் அகர்வால் பொறுப்பேற்றுள்ளார். 

சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை பிரபலங்கள் பலரும் உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர். முக்கிய தகவல் பரிமாற்ற தளமாகவும் ட்விட்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ட்விட்டர் சிஇஓ பதவியை ஜேக் டார்ஸி நேற்று ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தில் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (சிடிஓ) இருந்த பராக் அகர்வால் டுவிட்டரின் புதிய சிஇஓவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Parag Agrawal becomes Twitter CEO.. Who is Parag Agrawal?

இந்தியாவில் பிறந்த பராக் அக்ரவால், மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்யீட்டர் சைன்ஸ் பயின்றார். பின்னர் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கேயே பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி பின் அங்கேயே குடியுரிமை பெற்று குடியேறினார். பின்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹூ நிறுவனங்களில் சிறிய அளவிலான எஞ்சினியர் தொடங்கி பெரிய அளவிலான டீம் லீடர் பொறுப்புகளை கூட வகித்து இருக்கிறார்.

Parag Agrawal becomes Twitter CEO.. Who is Parag Agrawal?

கடந்த 2011ஆம் ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலையில் இணைந்தார். அந்நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்பத் தலைவர் ஆக இருந்த ஆடம் அப்பதவியில் இருந்து விலகியதை அடுத்து மார்ச் 8, 2018ல் பராக் அக்ரவால் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) பொறுப்பேற்றார். இப்போது 2021 நவம்பரில் பராக் அகர்வால், டுவிட்டரின் சிஇஓவாக பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Parag Agrawal becomes Twitter CEO.. Who is Parag Agrawal?

சர்வதேச நிறுவனங்கள், முக்கியமாக அமெரிக்காவின் டாப் நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓ உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். மைக்ரோசாப்ட் சிஇஓவாக சத்யா நாடெல்லா, கூகுள் சிஇஓவாக தமிழரான சுந்தர் பிச்சை, ஐபிஎம் உள்ளிட்ட மற்ற பெரிய நிறுவனங்களின் சிஇஓவாகவும் இந்தியர்களே உள்ளனர். உலகின் டாப் 500 நிறுவனங்களின் சிஇஓக்களில் பராக் அகர்வாலும், மார்க் ஜூக்கர்பர்கும் மிகவும் இளமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios