Asianet News TamilAsianet News Tamil

டிவிட்டரின் புதிய சிஇஓ-வான பரக் அக்ராவல்… அவருக்கு இவ்வளவு சம்பளமா? வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!!

டிவிட்டரின் புதிய சிஇஓ-வான பரக் அக்ராவலுக்கு 1.40 மில்லியன் அமெரிக்க டாலர் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Parag Agarwal salary for per annum
Author
India, First Published Nov 30, 2021, 7:57 PM IST

டிவிட்டரின் புதிய சிஇஓ-வான பரக் அக்ராவலுக்கு 1.40 மில்லியன் அமெரிக்க டாலர் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகின் மாபெரும் டெக் நிறுவனங்களாகத் திகழும் பல நிறுவனத்தில் தற்போது இந்தியர்கள் உயர் பதவி வகித்து வருகிறார்கள். கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சையில் துவங்கி தற்போது டிவிட்டர் பராக் அகர்வால் வரையில் பல நிறுவனங்களில் அடுத்தடுத்து இந்தியர்கள் சிஇஓவாக நியமிக்கப்படுகிறார்கள். முன்னதாக பிரபல சமூகவலைதள நிறுவனமான டிவிட்டரின் தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த ஜாக் டோர்சி அப்பதவியிலிருந்து விலகுவதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இதற்கான ராஜினாமா கடிதத்தையும் அவர் சமர்ப்பித்திருந்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக டிவிட்டரின் புதிய சிஇஓவாக பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவில் பிறந்தவர், மும்பை ஐஐடியில் பிடெக் பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டம் பயின்றவர். இதையடுத்து அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின்னர் அங்கேயே குடியுரிமை பெற்றார். இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹு எனும் தேடு பொறி நிறுவனத்திலும் பணியாற்றினார். இங்கெல்லாம் தொடங்கிய இவரது பயணம் 2011 ஆம் ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிக்கு சேர்ந்தார். பின்னர் படிப்படியாக முன்னேறி தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பொறுப்பேற்ற இவர் டிவிட்டரின் சிஇஓவாக தற்போது பதவி ஏற்றுள்ளார்.

Parag Agarwal salary for per annum

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா, ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா, அடோப் நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு நாரயேன், விஎம்வேரின் சிஇஓ ரகு ரகுராம் ஆகியோர் வரிசையில் தற்போது டிவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால் இடம்பிடித்துள்ளார். இவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது தான் கூடுதல் சிறப்பம்சம். இந்த நிலையில் டிவிட்டர் சிஇஓ பரக் அக்ராவலுக்கு ஆண்டுக்கு 1.40 மில்லியன் அமெரிக்க டாலர் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் பராக் அகர்வாலின் ஆண்டு வருமானம் ரூ.10,51,57,220 (Ten Crore Fifty One Lakh Fifty Seven Thousand Two Hundred Twenty) கோடி ஆகும். நவம்பர் 29 ஆம் தேதி பரக் அக்ராவலுக்கு ட்விட்டர் நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது. அவருக்கு இனி ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஊதியமாக வழங்கப்படும்.

Parag Agarwal salary for per annum

அதுதவிர அவருடைய அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 150% ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படும். இது தவிர ட்விட்டர் ஊழியர்களுக்கான சலுகைத் திட்டங்கள் அனைத்துமே இவருக்குப் பொருந்தும். மேலும் செயல்திறனுக்கு ஏற்ப அலவன்ஸ்களும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. முன்னனி நிறுவனங்களில் உயர் பதவி வகித்து வரும் இந்தியர்களின் சம்பளங்கள்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை – ரூ.1718 கோடி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெல்லா – ரூ.3084 கோடி, ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா – ரூ.1321 கோடி, அடோப் நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு நாரயேன் – ரூ.4500 கோடி, அந்த வகையில் தற்போது டிவிட்டரின் சிஇஓ பராக் அகர்வால்- ரூ.7.5 கோடி (போனஸ் இல்லாமல்) சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios