முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை அடுத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானதை அடுத்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் டெல்லி செல்கின்றனர்.
முன்னாள் பிரதமரும் பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஜூன் 11ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளித்துவருவதாகவும் தெரிவித்தது.
இதையடுத்து இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்ததாகவே தெரிவித்திருந்தது. அதனால் தேசிய அளவில் பாஜகவின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்ப்பட்டன.
இந்நிலையில், வாஜ்பாய் மாலை 5.05 மணிக்கு காலமானார். இந்தியாவின் சிறந்த பிரதமராக அறியப்படும் வாஜ்பாய், எதிக்கட்சியினராலும் விரும்பப்பட்டவர் ஆவார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார். திமுக செயல் தலைவர் ஸ்டாலின், இன்று இரவு 9.30 மணிக்கு டெல்லி செல்ல உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் ஆகியோரும் டெல்லி செல்கின்றனர்.
