இந்தியாவின் சந்திரயான் 2 திட்டம் இறுதி கட்டத்தில் சிக்னல் துண்டிப்பால் பின்னடை சந்தித்தத்தை பாகிஸ்தானியர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி தீர்த்துள்ளனர்.
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த ஜூலையில் ஏவியது. படிப்படியாக புவியின் நீள் வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்ட விண்கலம், நிலவை மிக அருகில் அடைந்தது. நிலவுக்கு அருகே வந்ததும் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் தரையில் இறங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.
சுமார் 95 சதவீத பணிகள் முடிவடைந்திருந்த நிகையில், இன்று அதிகாலை விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க இருந்தது. ஆனால், வெறும் 2.1 கி.மீ தூரத்தில் விக்ரம் லேண்டர் இருந்தபோது திடீரென சிக்னலை இழந்தது. இதனால், இறுதியில் ஆய்வின் முக்கிய நோக்கமான நிலவின் தரையில் விக்ரம் லேண்டரால் தரையிறங்க முடியாமல் போனது. இதனால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களும் கவலை அடைந்தனர்.
இந்தியர்கள் இஸ்ரோவுக்கு ஆதரவாகவும், 95 சதவீத வெற்றியை அடைந்ததற்காகப் பாராட்டியும் சமூக ஊடங்களில் கருத்திட்டு வந்தனர். ஆனால், அண்டை நாடான பாகிஸ்தானின் இஸ்ரோவின் தோல்வியைக் கொண்டாடித் தீர்த்துள்ளனர். இதற்காக #indiafailed என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சமூக ஊடகங்களில் பதவிட்டனர். இந்த ஹாஷ்டேக்கைப் பயன்படுத்தி பாகிஸ்தானியர்கள் பலரும் கிண்டலடித்தும், நக்கலாகவும் ட்விட்டரில் கருத்திட்டுவருகின்றனர். இந்த ஹாஷ்டேக் பாகிஸ்தானில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது. 
இந்நிலையில் இந்த ஹாஸ்டேக் மற்றும் பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி தரும் வகையில் இந்தியர்களும் ஹாஷ்டேக் உருவாக்கி பாகிஸ்தானை வறுத்தெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக ட்விட்டரில்  #proudofISRO, #worthlesspakistan போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி கிண்டலடிக்கும் பாகிஸ்தானியர்களுக்கு பதிலடி தந்துவருகிறார்கள்.