இந்தியா மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதலில் பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்து தப்பித்த பாகிஸ்தான் விமானி கைது செய்யப்பட்டுள்ளார்
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் உருவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இரண்டு தரப்பும் எல்லையோரங்களில் மோதிக்கொண்ட நிலையில், இன்று காலை முதல் இரு தரப்பும் தீவிர தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை குறிவைத்து தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டது. இதற்காக ஏவுகனைகள், ட்ரோன்,மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு நடுவானிலேயே அழித்தது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்தியப் படைகளுடன் நடந்த கடும் சண்டையில் பாகிஸ்தான் விமானி ஒருவர் உயிருடன் பிடிபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.மேலும் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்திய ராணுவம் அல்லது பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.


