Pakistani bullets reminiscent of Vajpayee
இந்தியா உடனனான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் அனைத்தும் மீறப்படுவதற்கே என்பதே பாகிஸ்தானின் பொது சித்தாந்தம். அதை சமீப காலமாக மிக மோசமாக வெளிகாட்டி வருகிறது அந்த அரசு.
கட்ந்த ஐந்து நாட்களில் மட்டும் மூன்று முறை எல்லை தாண்டி வந்து உயிர்பலி வாங்கியிருக்கும் பாகிஸ்தானின் தோட்டாக்கள் வாஜ்பாயை மிஸ் பண்ண வைக்கின்றன.
கடந்த வாஜ்பாய் ஆட்சியின்போதுதான் கார்கில் போர் மூண்டது. சர்வதேசத்தையும் திரும்பிப்பார்க்க வைத்த இந்த போரில் இந்தியா அசுரபலத்துடன் வென்றது.
இந்நிலையில் அதன்பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் அவ்வப்போது வால்த்தனம் காட்டிட தயங்கவில்லை. இந்நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரம் செய்த பா.ஜ.க. ‘மோடி ஆட்சியில் பா.ஜ.க.வின் எல்லை தாண்டிய தீவிரவாத வால் ஒட்ட நறுக்கப்படும்.’ என்பதை ஹைலைட் விஷயமாக பிரதானப்படுத்தினார்கள்.

ஆட்சியை பிடித்து பிரதமரான மோடி எடுத்த எடுப்பில் எம்.எஸ்.தோணி போல் ஹெலிகாப்டர் ஷாட் ஒன்றை அடித்து பாகிஸ்தானை பதறவைப்பார் என்று தேசமே எதிர்பார்த்தது.
ஆனால் அவரோ நவாஸ் ஷெரீப்பை ஆரத்தழுவி, அவரது அம்மாவுக்கு புடவை கொடுத்தனுப்பி இரு நாட்டு நல்லுறவை உச்சிமுகர்ந்தார்.
சரி, இது தவறில்லை. தாக்குதல் என்று வந்தால் நம் படைவீரர்களும் இறப்பர் தானே! நட்பு ரீதியில் அமைதியை உருவாக்கும் மோடியின் முயற்சி சரியானதே. ஒரு வேளை பாகிஸ்தான் துப்பாக்கி தூக்கினால் மோடியோ பிரங்கியை தூக்கி போட்டுத்தள்ளிவிடுவார்...என்று மக்களே சமாதானம் சொல்லிக் கொண்டார்கள்.
இந்நிலையில் நட்பு ரீதியான கைகுலுக்கள்களை மறந்த பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி சொல்லி சொல்லி அடிப்பது வாடிக்கையாகிவிட்டது. மோடி அரசு அதிரடி மாயாஜாலம் காட்டாமல் இருந்தது மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. காங்கிரஸோ பிரதமரின் போர் சாதுர்யம் பற்றி விமர்சனமே செய்தது. இதனால் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து ‘சர்ஜிகல் ஆபரேஷன்’ நடத்தி மிரள வைத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் வாயோடு சேர்த்து உள்நாட்டு விமர்சனங்களுக்கும் பிளாஸ்டர் போட்டார் மோடி.

ஆனால் அடிபட்டி சில நாட்களிலேயே மீண்டும் துள்ளி எழுந்த பாகிஸ்தான் மறுபடியும் எல்லை மீறி தாக்குதல் நடத்துவதை துவக்கிவிட்டது.
இன்று கூட ரஜோரி மாவட்டத்தினுள் புகுந்து இரண்டு பொதுமக்களை போட்டுத்தள்ளி இருக்கிறார்கள்.
இந்திய எல்லைக்குள் பாகிஸ்தானால் நிகழும் இந்த தொடர் உயிரிழப்புகள் மோடியின் யுத்த சாணக்கியத்தனத்தை சந்தேகத்துக்கு ஆளாக்கியுள்ளதாக விமர்சகர்கள் சொல்கிறார்கள்.
வாஜ்பாய் போல் பாகிஸ்தானை ஒடுக்கும் விஷயத்தில் மோடியிடம் இரும்புத்திட்டங்களோ, செயல்பாடுகளோ இல்லை என்கிறார்கள். இந்தியாவினுள் நுழையும் பாகிஸ்தான் தோட்டாக்கள் வாஜ்பாயை மிஸ் பண்ண வைக்கின்றன என்கிறார்கள்.
அடிப்படையில் கவிஞர் மற்றும் அமைதிப்பேர்வழியான வாஜ்பாயின் யுத்த சாணக்கியத்தனம் அதிரடி மனிதராக அறியப்படும் மோடியிடம் இல்லை என்பது உண்மையா?!
மோடியின் செயல்கள்தான் இதற்கு பதில் சொல்ல முடியும்.
