‘‘யாருக்குத் தெரியும்..? சிந்து ஒருநாள் இந்தியாவுடன் சேரக்கூடும்’’ என ராஜ்நாத் சிங் பேசியது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சிந்து முதல்வர் முராத் அலி ஷா, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிந்து ‘இந்தியாவுக்குத் திரும்பலாம்’ என்ற ராஜ்நாத் சிங்கின் பேச்சை கடுமையாகக் கண்டித்துள்ளார். ‘‘ராஜ்நாத் சிங், பகல் கனவு காண்பதை நிறுத்த வேண்டும். சிந்து பாகிஸ்தானின் ஒரு பகுதி. அதைப் பிரிக்க முடியாது, அதன் ஒருங்கிணைந்த பகுதி. சிந்து பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது, உள்ளது, தொடர்ந்து இருக்கும்" என்று கூறினார்.

ராஜ்நாத் சிங்கின் சிந்து குறித்த பேச்சால் பாகிஸ்தான் தலைவர்கள் கோபத்தில் உள்ளனர். பலுசிஸ்தான், கைபர் பக்துன்க்வா, சிந்து உள்ளிட்ட பல பாகிஸ்தான் மாகாணங்களில் பிரிவினைவாத இயக்கங்கள் நடந்து வருகின்றன. எனவே, ராஜ்நாத் சிங்கின் பேச்சு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிந்து மாகாண முதலமைச்சர் முராத் அலி ஷா ராஜ்நாத் சிங்கின் பேச்சை பொறுப்பற்றது" என்று கூறியுள்ளார்.

ராத் அலி ஷா இதுகுறித்து "பாகிஸ்தான் உருவாவதற்கு முன்பே, 1936-ல் பம்பாய் பிரசிடென்சியில் இருந்து பிரிந்து சிந்து அதன் அடையாளத்தை நிறுவியது. சிந்து மக்கள் எப்போதும் தங்கள் கலாச்சார பாரம்பரியம், அரசியல் அடையாளம், சுயாட்சி ஆகியவற்றில் ஒற்றுமையாக இருந்துள்ளனர். இதுபோன்ற உணர்வுகளில் தலையிட எந்தவொரு வெளிப்புற சக்தியும் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அவர் கூறியுள்ளார்.

மூத்த இந்திய இராணுவ அதிகாரி ஒருவர், ‘‘ராஜ்நாத் சிங்கின் பேச்சு நன்கு யோசித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை. சிந்து குறித்து அவர் பேச்சு வைரலாகும் என்பது ராஜ்நாத் சிங்கிற்குத் தெரியாதா? அவரது அறிக்கை பாகிஸ்தானில் காட்டுத்தீ போல் பரவும். ஆனாலும், அவர் இதைச் சொன்னால், அதற்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்க வேண்டும். பாகிஸ்தானில் சிந்து மாகாணம் உருவாக்கப்படுவதற்கான போராட்டங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. நாகரிக மட்டத்தில், சிந்து எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும். எல்லைகள் மாறக்கூடும். சிந்து பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டதை இன்றும் சிந்து இந்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்றும் அவர் கூறினார்.