pakistan military attack and 4 indian jawans killed

இந்திய எல்லைப் பகுதிககுள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தனர் தாக்குதல் நடத்தியதில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படையைச் சேர்ந்த 4 வீரர்கள் மரணமடைந்தனர்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு-காஷ்மீர் மாநில எல்லைப்பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் ராணுவம் வாடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய செயலுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. 

இந்நிலையில், அம்மாநிலத்தின் சம்பா செக்டாரில் உள்ள செம்பிலியால் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இச்சம்பவத்தில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். இந்திய ராணுவத்தினரும் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உள்துறை மற்றம் பாதுகாப்புத்துறை அமைச்சர் இருவரும் இந்த தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.