'திட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு இந்தியா வான்வெளி அனுமதி மறுத்ததாக செய்தி பரவியது.

இலங்கை ‘திட்வா’ புயலால் கடுமையான சேதத்தை சந்துள்ளது. பல பகுதிகள் நீரில் மூழ்கி, உயிரிழப்புகளும் சேதங்களும் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், உலகம் நாடுகளின் உதவி மிக முக்கியம். அதே நேரத்தில், பாகிஸ்தானின் உதவி விமானத்திற்கு இந்தியா வான்வெளி அனுமதி மறுத்ததென சில ஊடகங்கள் பரப்பிய செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆனால் உண்மையில் நிலைமை முற்றிலும் மாறாக இருந்தது. இந்த போலிச் செய்திகளுக்கு இந்தியா திடீர் பதில் அளித்து தெளிவுபடுத்தியது. பாகிஸ்தான் திங்கள்கிழமை பிற்பகல் 1 மணி அளவில் இந்தியாவிடம் வான்வெளி அனுமதி கோரிக்கை அனுப்பப்பட்டது. இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லும் நோக்கிலான கோரிக்கை, இந்தியா வெறும் நான்கு மணி நேரத்தில் அதற்கான ஒப்புதலை வழங்கிவிட்டது.

மாலை 5:30க்கு பாகிஸ்தானுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அனுப்பப்பட்டது. அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் சில பாகிஸ்தான் ஊடகங்கள் தவறான தகவல் வெளியிட்டன. இந்தியா எழுத்துபூர்வ அனுமதியை அனுப்பியதாகவும் அதிகாரிகள் கூறினர். சுவாரஸ்யமாக, இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு இன்னும் அனுமதி இல்லை. இருந்தும், தூய மனிதாபிமான நோக்கில் இந்தியா தன் வான்வெளியை திறந்ததாகவும் அதிகாரப்பூர்வ தரப்புகள் தெரிவித்துள்ளனர்.

மாறாக, இந்தியா ஏற்கனவே மிகப்பெரிய அளவில் உதவி செய்துள்ளது. “ஆபரேஷன் சாகர் பந்து” என்ற திட்டத்தின் கீழ் 53 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. இதில் அவசர உணவு, கூடாரங்கள், மருந்துகள், போர்வைகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்திய விமானப்படையின் மூன்று விமானங்கள், கடற்படையின் ‘சுகன்யா’ கப்பல் மூலம் கூடுதல் 12 டன் உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டன.

NDRF-ன் 80 பேர் கொண்ட மீட்புக் குழு, ஐந்து பேர் கொண்ட மருத்துவ அணி, இரண்டு Bhishm Cubes உள்ளிட்ட உதவி அணிகளும் இலங்கையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு பாதிப்புகளை குறைப்பதற்கும் உயிர்களை காப்பதற்கும் இந்த அணிகள் செயல்படுகின்றன. 334க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பல நகரங்களில் சாலைகள் நீரில் மூழ்கி மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.