flood in pakistan: பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டுமா இந்தியா? பிரதமர் மோடி வேதனையுடன் ட்வீட்
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பு வேதனையளிக்கிறது என்று பிரதமர் மோடி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள வெள்ளபாதிப்பு வேதனையளிக்கிறது என்று பிரதமர் மோடி வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் பிற்பகுதியில் தொடங்கிய பருவமழை அந்நாட்டில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை மழை மற்றும் வெள்ளத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். 3 கோடிக்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டி? ராகுல் காந்திக்கு எதிராக போட்டியா?
ஏற்கெனவே பாகிஸ்தான் நிதிப்பற்றாக்குறையாலும், அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் சர்வதேச செலாவணி நிதியத்திடம் கடன் கேட்டு நிற்கிறது. இந்த நேரத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய முடியாமல் பாகிஸ்தான் அரசு தவித்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளம், பாதிப்பு, மக்கள் துயரம் ஆகியவற்றைப் பார்த்து வேதனையடைந்து பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரி்ல் பதிவிட்ட கருத்தில் “ பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவுகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், காயத்தால் அவதிப்படுபவர்களுக்கும், இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எங்களின் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிக்கிறோம். பாகிஸ்தானில் விரைவில் இயல்புநிலைவரும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்: ஆயிரம் பேர் உயிரிழப்பு: சர்வதேச உதவி கோருகிறது
பாகிஸ்தானுக்கு மனிதநேய உதவிகளைச் செய்வது தொடர்பாக மத்தியஅரசு ஆலோசித்து வருவதாக தி இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசு உறுதியான எந்த முடிவும் எடுக்கவில்லை.
ஒருவேளை பாகிஸ்தானுக்கு உதவுவது என்று மத்திய அரசு முடிவுஎடுத்தால், பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபின், பாகிஸ்தானுக்கு இந்தியா செய்யும் முதல் மனிதநேய உதவி இதுவாக இருக்கும்.
இதற்கு முன் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, 2010ம் ஆண்டு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம், 2005ம் ஆண்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்ககப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.