ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் Uri செக்டாரில் புகுந்த தீவிரவாதிகள் இந்தியா ராணுவம் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 19 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து Surgical Strike தாக்குதல் நடத்தியது.
இதற்கு பலிவாங்கும் செயலாக பாகிஸ்தான் ராணுவம் எல்லை அருகே உள்ள கிராமங்களை குறிவைத்து அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. Naushera மாவட்டத்தில் Kalsian, Ser மற்றும் Makdi பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேறி முகாம்களில் தங்கியுள்ளனர். இதனால் எல்லைப்பகுதிகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில், Kathua மாவட்டத்தில் இருந்து Poonch வரை சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்கோடு வரை 314 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே, எல்லைப்பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்து வரும் நிலையில், Sopor மாவட்டத்தில் Tujjar பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஒருவன் நேற்றிரவு கைது செய்யப்பட்டான். அம்மாநில போலீசாரும், பாதுகாப்பு படையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதியை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவனிடம் இருந்து ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
