மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரின் அக்னூர், சுந்தர்பேனி செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

நேற்று இரவு முதல் விடியற்காலை வரை அத்துமீறிய துப்பாக்கிச்சூடு  நடத்தி உள்ளது. சுமார் 10.25 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ தரப்பில் இருந்து தகவல் வெளிவந்த வண்ண உள்ளன. மேலும் பாகிஸ்தானுக்கு இந்திய ரானுய்வமும் தக்க பதிலடி கொடுத்து உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இரு நாட்டு அமைதியும் சீர்குலைந்து. அதற்கு அடுத்த படியாக சில நாட்கள் மட்டுமே சற்று அமைதியாக இருந்த பாகிஸ்தான் ராணுவம் தற்போது மீண்டும் அத்துமீறிய தக்குதலில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.