மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவேஷ் குமார் வெளியிட்ட அறிக்கையில் “ இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை மதிக்காமல் பாகிஸ்தான் தொடர்ந்து மீறி வருகிறது. சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது பாகிஸ்தான்.

இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 2,050 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய  பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இதுவரை 21 இந்திய அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து சர்வதேச எல்லைப்பகுதியிலும் அமைதி நிலவ பாகிஸ்தான் ஒத்துழைக்க வேண்டும் இதை இந்தியா பலமுறை வலியுறுத்திவிட்டது.

ஆனால் இந்திய ராணுவத்தைப் பொறுத்தவரை எதிரிநாட்டுத் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளவும், எல்லைக்குள் யாரும் ஊடுருவி விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் மட்டுமே ஈடுபடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது