Pajakavinar the contract no - UP CM Adityanath Action

உத்தரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சியினர், எம்.எல்.ஏ.க்கள் யாருக்கும் அரசு பொதுப்பணி வேலையில் தங்களுக்கு சொந்தமானவர்களையும், தாங்களும் ‘கான்ட்ராக்ட்’ பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று முதல்வர் யோகிஆதித்யநாத் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, 15 ஆண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்றது. முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பு ஏற்றதில் இருந்து நாள் தோறும் பல அதிரடி அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தனது சொந்த ஊராக கோரப்பூருக்கு முதல்வர் ஆதித்யநாத்நேற்றுமுன்தினம் சென்றார். அங்கு நேற்று கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது-

சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதியஜனதா கட்சிக்கு மக்கள் சிறப்பான ஆதரவு அளித்து, எதிர்பாராத வெற்றியை அளித்து இருக்கிறார்கள். இந்த வெற்றி மூலம், கட்சிக்கும், நமக்கும் பொறுப்பு அதிகரித்துள்ளது.

ஆதலால், அரசின் எந்தவிதமான பொதுப்பணித்துறை பணிகள் ‘கான்ட்ராக்ட்களை’ கட்சியினரோ, எம்.எல்.ஏ.க்களோ, அவரின் ஆதரவாளர்களோ எடுக்கக் கூடாது. அந்த பணிகள் எப்படி நடக்கின்றன என்று கண்காணிக்க மட்டுமே செய்ய வேண்டும். அதில் ஏதேனும் முறைகேடுகள் ஏற்பட்டால் என்னிடம் தெரிவிக்கலாம். உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன்.

மக்கள் நம்மீது மிகுந்த நம்பிக்கை வைத்து அதிகமாக எதிர்பார்க்கிறார்கள், அவர்களின நம்பகத்தன்மையை பெறும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும். வெளியே தம்பட்டம் அடிப்பதற்காக, முதல்வர், கேபினெட்அமைச்சர் பதவி இல்லை. நாள் ஒன்றக்கு 18 முதல் 20 மணிநேரம் உழைக்க வேண்டும். யாருக்கும் பொழுதைக் கழிக்க இருக்க கூடாது.

மாநிலத்தில் சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக இருக்கிறது. அதை எல்லாம் சரி செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையை ஒழித்து, அவர்கள் சுதந்திரமாக நடமாட வைக்க வேண்டும்.

அடுத்த இரு மாதங்களில் மாநில அ ரசு எப்படி பணியாற்றுகிறது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். மக்கள் எப்போதும் அணுகும் வரையில், அமைச்சர்கள் இருக்கு வேண்டும். உங்கள் கதவுகள் எப்போதும் மக்களுக்காக திறந்து இருக்க வேண்டும்.

மாநிலத்தில் குண்டர்களுக்கும், ரவுடிகளுக்கும், மாபியா கும்பலுக்கும், குற்றவாளிகளுக்கும் வாய்ப்பு கொடுக்கக் கூடாது. அவர்கள் உத்தரப்பிரதேசத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் அல்லது சிறைக்குள் செல்ல வேண்டும்.

2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, அதற்காக அடுத்த இரு ஆண்டுகளுக்கு நாம் இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.