பத்ம விபூஷன் விருது பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த டெல்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட  துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தினத்திற்கு முன்பாக பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவதுண்டு. கடந்த 1954-ம் ஆண்டு முதல் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, 2017-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு கடங்நத ஜனவரி மாதம் 25 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, நாட்டின் இரண்டாவது உயரிய விருதாகக் கருதப்படும் பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர்  இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது. . இசைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும்விதமாக அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லியில்  குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த வழங்கினார்.

இந்த விவில் பிரதமர் மோடி, குடியரசுத் துயைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, அமைச்சர்கள், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.