Padma Vathu movie is worth Rs 56 crore in 3 days

இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உருவாக்கத்தில் பத்மாவதி திரைப்படம் உருவாக்கப்பட்ட கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பா.ஜ.க, ராஜ்புத் கார்னி சேனா, ராஜ்புத் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் பத்மாவதி திரைப்படம் பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு கடந்த 25 ஆம் தேதி இந்தியா முழுக்க ரிலீஸ் செய்யப்பட்டது. ராஜஸ்தான், அரியனா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் பத்மாவத் திரைப்படம் வெளியிடப்படவில்லை. பத்மாவத் திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில், தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். வாள் சண்டை, குதிரை சவாரி என பயிற்சிகள் எடுத்து இதில் நடித்துள்ளார்.

சரித்திர கால ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து ராணியாகவே மாறி இருந்தார். படம் பார்த்தவர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஆனால், ராஜபுத்திர வம்சத்தை சேர்நத்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், தீபிகா படுகோனே போலீஸ் பாதுகாப்புடன் வெளியே சென்று வருகிறார். படம் வெளியான பிறகும் தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல்கள் விடப்பட்டு வருகின்றன. 

கடந்த 24 ஆம் தேதி சிறப்பு காட்சிகள் வெளியானது. இதன் மூலம் ரூ.5 கோடி வசூலாகி உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 ஆம் தேதி ரூ.19 கோடியும், 26 ஆம் தேதி ரூ.32 கோடியும் மொத்தம் ரூ.56 கோடி வசூலாகி உள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பத்மாவத் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அனுமதி அளித்த சென்சார் போர்டு தலைவர் பிரசான் ஜோஷிக்கு, கர்னி சேவா அமைப்பினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். 

ராஜஸ்தானி மாநிலம் ஜெய்பூரில் நடைபெறும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக பிரசான் ஜோஷி திட்டமிட்டிருந்தார். கர்னி சேவா அமைப்பினர் விடுத்த மிரட்டல் காரணமாக அவர் நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார்.