தென்மேற்கு பருவ மழை காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக விடாது பெய்து வந்த கனமழை காரணமாக, கேரளா கர்நாடக தமிழக எல்லையோர பகுதிகளில் பெருமளவு வெள்ளப்பெருக்கு எற்பட்டது.

மேலும், கேரளாவில் 10 கும் மேற்பட்ட மாவட்டங்களில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 380 கும்  மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். பலர் நிலச்சரிவில் சிக்கி மாயமாகி உள்ளனர். வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்து உள்ளது. 

இந்த வரிசையில் உலகப்புகழ் பெற்ற சபரி மலை ஐயப்பன் கோவில் வெள்ளக்காடாக மாறியது. பத்து நாட்களாக சபரி மலைக்கு பக்தர்கள் போக முடியாத சூழல் இருந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு, நேற்று மாலை, சபரி மலையில் படி பூஜை நடைப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக சபரி மலையில் இது போன்றதொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதே கிடையாதாம். இதனை பார்த்த பக்தர்கள் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தனர். 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். எப்போது தான் மழை விடும் என்று மக்கள் அனைவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தனர். மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட உடன் சில மணி நேரம் மழை வராமல் இருந்த போது தான் மக்களால் பெருமூச்சி விட முடிந்தது. அந்த அத்தருணத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு மழை வெளுக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இதன் பிறகு, உலக அளவில் கேரள வெள்ளம் குறித்து கவனம் ஈர்க்கப்பட்டது. கேரளாவில் ஒரு பக்கம் அதிக மழை பெய்து வர, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வறண்ட வானிலை காணப்பட்டது. 
 

கடந்த ஒரு வார காலமாக, கேரளாவில் மழை படிபடியாக குறைந்தது. பின்னர் தற்போது இதற்கு மாறாக அதிக அளவில் வெப்பம் நிலவுகிறது. சில நாட்களாக தொடராந்து மழை பெய்து வந்த கேரளாவில், எப்போது மழை நிற்குமோ என்ற  பிரார்த்தனை இருந்தது... ஆனால் தற்போது அதி பயங்கர வெயில் நிலவுவதாக வானிலை தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக இத்தனை நாள் கடும் வெள்ளப்பாதிப்பில் அவதிப்பட்டு வந்த மக்கள் தற்போது வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.