Asianet News TamilAsianet News Tamil

அதிகமாக இண்டர்நெட் பயன்படுத்துபவரா நீங்கள் ? உங்களுக்கு ஒரு ஷாக் நியூஸ் !!

அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய அறிவியலாளர்களின் புதிய ஆய்வு ஒன்றில் அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்துபவர்களின்  நினைவாற்றல் அதிக அளவு பாதிக்கப்படும்  என  கண்டறிந்து உள்ளனர்.

over  internet memory loss
Author
Chennai, First Published Jun 6, 2019, 9:34 PM IST

அதிக அளவு இண்டர்நெட்டை  பயன்படுத்தும் 100க்கும் மேற்பட்டவர்களின்  நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் ஆகியவை சோதனை செய்யப்பட்டது. அவர்களது மூளை ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.  இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள்  உலக மனநல பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இந்த திட்டத்தின் தலைவர் மேற்கு சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானி ஜோசப் பிர்த், இணைய வடிவமைப்பு எவ்வாறு மனித மூளையின் கட்டமைப்பு மற்றும் திறன்களை இரண்டாக மாற்றியது என்பதை  பத்திரிகையில் குறிப்பிட்டு உள்ளார்.

over  internet memory loss

இன்டர்நெட்டிலிலுள்ள வரம்பற்ற ஸ்ட்ரீம் உங்களின்  கவனத்தை தொடர்ந்து  திசைதிருப்பி வைத்திருப்பதை ஊக்குவிக்கிறது. வேறு ஒரு பணியில்  கவனத்தை செலுத்தும் உங்கள் திறன் கணிசமாகக் குறையும் என ஜோசப் பிர்த் கூறி உள்ளார்.

over  internet memory loss

தேவையான தகவல்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன. நமது மூளையில் சேர்த்து வைக்கவேண்டிய தேவை இல்லை. கூகுள் தேடலிலும் , விக்கிபிடியாவிலும் தகவல்கள் கிடைக்கின்றன் அதனால் விஷயங்களை மூளையில் சேமித்து வைக்கவேண்டிய தேவைகள் குறைகின்றன என கூறினார்.

இது போன்ற தொடர் நிகழ்வுகளால் இண்டெர்நெட் பயன்படுத்துபவர்களின் நினைவாற்றல் குறைந்து வரும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios