பிரசாதம் சாப்பிட்ட 650 பேருக்கு உடல்நலக்குறைவு.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்..

மகாராஷ்டிராவில் பிரசாதத்தை உட்கொண்ட 650 க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர்.

Over 650 People Fall Ill in Maharashtra After Consuming Prasad Rya

மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மற்றும் ஹிங்கோலி மாவட்டங்களில் மொத்தம் 467 நபர்கள் பிரசாதம் சாப்பிட்டதால் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பர்பானி, பீட் மற்றும் துலே மாவட்டங்களில் இதே போல் பலருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களில் மொத்தம் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில், லத்தூரில் உள்ள தியோனி தாலுகாவிலுள்ள வாகல்வாடி மற்றும் கரப்வாடி (குர்தால்) ஆகிய இடங்களைச் சேர்ந்த 443 பக்தர்களும், ஹிங்கோலியில் உள்ள குட்ஜ் (செங்கான்) பகுதியைச் சேர்ந்த 24 நபர்களும் கோயிலில் கொடுத்த பிரசாதத்தை உட்கொண்டனர். கடந்த வியாழக்கிழமை  மாலை வாகல்வாடியில் நடந்த ஏகாதசி விழாவில் இவர்கள் கலந்து கொண்டதாகவும், அப்போது கோயிலில் கொடுக்கப்பட்ட பக்ரி பிரசாதத்தை உட்கொண்டுள்ளனர். இதை தொடர்ந்து வியாழக்கிழமை இரவு  315 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  கிராமத்திலேயே 306 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 

பெங்களூரு.. கழிவறையில் கூட தண்ணீர் இல்லை - மால்களை நோக்கி படையெடுக்கும் குடியிருப்பு வாசிகள்!

பர்பானி மாவட்டத்தில் வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களிலும் விரதத்தின் போது பிரசாதத்தை உட்கொண்ட 80 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நாகேஷ் லக்மாவார் கூறுகையில், மாவட்ட பொது மருத்துவமனையில் தற்போது 50 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 புதிய படைப்பிரிவுகள்.. இந்திய ராணுவம் கையில் எடுத்த ‘பினாகா’.. சீனாவுக்கு ஆப்பா.? வெளியான தகவல்..!

அதே போல் அம்பஜோகை மற்றும் கெவரை தாலுகாவில் பிரசாதம் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், நேற்று பிற்பகல் அமலாதே தாலுகாவில் பிரசாதத்தை உட்கொண்ட 52 பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 5 குழந்தைகளும் 20 பெண்களும் அடங்குவர். , மேலும் அதிர்ஷ்டவசமாக, அனைத்து நோயாளிகளின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios