தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு திறந்த வெளியிலேயே வசித்து வந்தோம். அதன் பின் கடன் வாங்கி, இந்த கூடாரத்தை அமைத்து இருக்கிறோம்.
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக ஜமுனாமுக் மாவட்டத்தில் உள்ள இரு கிராமங்களை சேர்ந்ச சுமார் 500 பேர் ரயில்வே தண்டவாளங்களில் வசித்து வருகின்றனர். வெள்ளநீரில் மூழ்காத ஒரே பகுதியாக தண்டவாளங்களே இருப்பதால் மக்கள் இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கின்றனர்.
அசாம் மாநிலத்தின் ஜமுனாமுக் மாவட்டத்தின் சன்ஜூராய் மற்றும் பாட்டிா பதார் கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களின் ஒட்டுமொத்த சேமிப்பு மற்றும் உடமைகள் அனைத்தையும் வெள்ளத்தில் பறிகொடுத்து விட்டனர். தார்பாய் மூலம் தற்காலிக கூடாரம் அமைத்து இருக்கும் கிராம மக்கள், தங்களுக்கு மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த ஐந்து நாட்களாக எந்த உதவியும் வழங்கப்படவே இல்லை என குற்றம்சாட்டி உள்ளனர்.
தற்காலிக கூடாரம்:
தான் வசித்து வந்த வீட்டை வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து 43 வயதான மோன்வாரா பேகம் தற்காலிக கூடாரம் அமைத்து தனது கடும்பத்தாருடன் வசித்து வருவதாக தெரிவித்து இருக்கிறார். இவர்களின் குடும்பத்தாருடன் மேலும் நான்கு குடும்பங்கள் சேர்ந்து ஒரே கூடாரத்தில் வசித்து வருவதாக அவர் தெரிவித்தார். சாப்பிட உணவு இன்றி மிகவும் கொடிய சூழலில் வசித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
“தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு திறந்த வெளியிலேயே வசித்து வந்தோம். அதன் பின் கடன் வாங்கி, இந்த கூடாரத்தை அமைத்து இருக்கிறோம். இந்த ஒற்றை கூடாரத்தில் ஐந்து குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு துளியும் தனியுரிமை இல்லை,” என்று மோன்வாரா பேகம் தெரிவித்து இருக்கிறார்.
தேசிய பேரிடர் மீட்பு குழு:
அசாம் மாநிலத்தின் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதுவரை 29 மாவட்டங்களிலன் 2 ஆயிரத்து 585 கிராங்களை சேர்ந்த சுமார் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதுவரை வெள்ள பாதிப்புகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதோடு 343 தற்காலிக முகாம்களில் சுமார் 86 ஆயிரத்து 772 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதோடு 411 நிவாரண பொருட்கள் வினியோக மையம் செயல்பட்டு வருகிறது. ராணுவம், பாதுகாப்பு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சேர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி உள்ள மக்களை மீட்க படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
