பெட்ரோல் பங்குகள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து நாளை மறுநாள் நள்ளிரவு வரை 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்னர், அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் பழைய நோட்டுகளை வாங்க மறுத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பவும், குடும்பதாரர்கள் வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவதிலும் சிக்கல் நீடித்து வருகிறது. ஆனால் ரிசர்வ் வங்கி இந்த இரு நிறுவனங்களும் 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை பெட்ரோல் பங்குகள் மதிக்காததால், பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் பங்குகள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் இருந்து நாளை மறுநாள் நள்ளிரவு வரை 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை கண்டிப்பாக பெற்றுக்கொள்ள வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளன.
