எதிர்க்கட்சித் தலைவர்களை இப்படி கைது செய்வது சர்வாதிகாரம்... இது ஜனநாயகம் அல்ல: ராபர்ட் வதேரா
காங்கிரஸோ அல்லது வேறு எந்த கட்சியோ ஆட்சியில் இருந்தால், அவர்களின் தலைவர்களை வேண்டுமென்றே சிறையில் அடைக்கிறார்கள் என தொழிலதிபரும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
காங்கிரஸோ அல்லது வேறு எந்த கட்சியோ ஆட்சியில் இருந்தால், அவர்களின் தலைவர்களை வேண்டுமென்றே சிறையில் அடைக்கிறார்கள் என தொழிலதிபரும் பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
"காங்கிரஸோ அல்லது வேறு எந்த கட்சியோ ஆட்சியில் இருந்தால், அவர்களின் தலைவர்களை வேண்டுமென்றே சிறையில் அடைக்கிறார்கள், நாடாளுமன்றத்தை விட்டு வெளியேற்றுகிறார்கள்... இதற்குப் பெயர்தான் சர்வாதிகாரம். இது ஜனநாயகம் அல்ல... நாம் பேச வேண்டியது வளர்ச்சியைப் பற்றிதான்... அதில் கவனம் செலுத்த வேண்டும்...'' என ராபர்ட் வதேரா கூறியுள்ளார்.
"மாநில அரசாங்கங்கள் எங்கிருந்தாலும், அவைகளை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள். மக்கள் இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இது நடக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"ஒரு கட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால், மக்கள் ஒரு கட்சிக்கு வாக்களித்திருந்தால், அதன் பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்க வேண்டும்" எனவும் ராபர்ட் வதேரா வலியுறுத்தி இருக்கிறார்.
6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 11 வயது சிறுவன்; ஆக்ராவில் அவலச் சம்பவம்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மீதான ஆளுங்கட்சியின் தாக்குதல் குறித்தும் கருத்து கூறிய ராபர்ட் வதேரா, "மக்கள் தங்கள் தலைவர்கள் வளர்ச்சி மற்றும் சாமானியர்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைப் பற்றி பேச வேண்டும் என்று விரும்புகிறார்கள். தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்துவது அவர்களுக்கு எந்த லாபத்தையும் அளிக்காது" என்றார்.
400 இடங்களில் வெற்றி பெறுவோம் எனக் கூறி மத்திய அரசு நாட்டில் அச்சம் நிறைந்த சூழலை உருவாக்கி வருவதாகவும் வதேரா குற்றம் சாட்டுகிறார்.
“இவ்வளவு முரண்பாடுகள் இருந்தபோதிலும் 400 இடங்களைத் தாண்டிவிடுவோம் என்று மிகுந்த நம்பிக்கையுடன் பேசுகிறார்கள். வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறையேடு செய்தோ, மற்ற கட்சிகளின் தலைவர்களை முடக்கியோ குழப்பங்களை உருவாக்கினால் தான் அவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டும் என்பதை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறாகள்" என்று வதேரா கருதுகிறார்.
"ஒரு நிறுவனம் நிதி மோசடியில் ஈடுபட்டால், அது வருமான வரித்துறை தான் விசாரித்து, அபராதம் விதிக்கப்பட வேண்டும், அமலாக்க இயக்குநரகம் அல்ல" என்றும் அவர் கூறினார்.
சிகரெட் பிடித்த பெண்களை குறுகுறுவென்று உற்றுப் பார்த்த இளைஞர் கொடூரக் கொலை!