Asianet News TamilAsianet News Tamil

மோடிக்கு எதிரான எதிர்கட்சிகளின் கூட்டம்! பின்வாங்கிய முக்கிய கட்சிகள்! அதிர்ச்சியில் சந்திரபாபு நாயுடு!

பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லியில் நாளை நடைபெறுவதாக இருந்த எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை சந்திரபாபு நாயுடு திடீரென ஒத்திவைத்துள்ளார்.

Opposition conclave Delhi postponed...Chandrababu Naidu information
Author
Delhi, First Published Nov 21, 2018, 10:32 AM IST

பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லியில் நாளை நடைபெறுவதாக இருந்த எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை சந்திரபாபு நாயுடு திடீரென ஒத்திவைத்துள்ளார்.

 Opposition conclave Delhi postponed...Chandrababu Naidu information

மாநில கட்சிகளை அழித்து இந்தியாவில் எதிர்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்க மோடி – அமித் ஷா கூட்டணி உருவாக்க முயல்வதாக சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்த அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு முயற்சி மேற்கொண்டு வருகிறார். Opposition conclave Delhi postponed...Chandrababu Naidu information

ராகுல் காந்தி முதல் ஸ்டாலின் வரை பல தலைவர்களை இதற்காக சந்திரபாபு நாயுடு சந்தித்து வருகிறார். இந்த நிலையில் மோடிக்கு எதிரான தலைவர்களின் கூட்டத்தை டெல்லியில் நாளை சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்திருந்தார். ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா பேனர்ஜி, பினரயி விஜயன், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலருக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்க சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்தில் பங்கேற்பதாக அனைத்து கட்சி தலைவர்களும் சந்திரபாபு நாயுடுவிடம் உறுதி அளித்திருந்தனர். Opposition conclave Delhi postponed...Chandrababu Naidu information

இந்த நிலையில் கூட்டம் நாளை நடைபெற உள்ளநிலையில் தலைவர்கள் ஒவ்வொருவராக பின்வாங்கியதாக கூறப்படுகிறது. சில தலைவர்கள் தங்கள் கட்சியின் 2ம் கட்ட தலைவர்களை மட்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இந்த தகவல்களை அறிந்து சந்திரபாபு நாயுடு அப்செட்டானதாக கூறப்படுகிறது. மேலும் முக்கிய தலைவர்கள் இல்லாமல் கூட்டம் நடைபெற்றால் அது மோடிக்கு சாதகம் ஆகிவிடும் என்று கருதி கூட்டத்தை சந்திரபாபு ஒத்திவைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios