கடந்த 2012ம் ஆண்டு குடியரசு தலைவராக பிரணாப் முகர்ஜி பதவியேற்றார். இவரது பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. இதையொட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில், ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே பாஜக வெற்றி பெற்றுள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்களை திரட்டி, ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து எதிர்க் கட்சியினரையும் அழைத்து பேசி, தங்களது ஆதரவு வேட்பாளரை நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

இதைதொடர்ந்து இன்று, டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சியினர் கூட்டம் நடந்து வருகிறது. இதில் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளனர்.

கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜூன கார்கே, லாலு பிரசாத், உமர் அப்துல்லா உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர்.

காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக சரதபவாரை தேர்வு செய்ய முடிவு செய்தனர். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சபாநாயகராக இருந்த மீராகுமார், கோபால் கிருஷ்ண காந்தி ஆகியோரின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

இன்று மாலை புதிய ஜனாதிபதிக்கான வேட்பாளரை அறிவிக்கப்படும் என கூட்டத்தில் பேசப்படுகிறது.