மற்ற இரு ஆணையர்கள் மோடி, அமித்ஷா இருவர் மீதான புகார்களுக்கு எதிராகக் கருத்தைப் பதிவு செய்து புகார்களை தள்ளுபடி செய்தனர். அதாவது இந்த விவாகரத்தில் முடிவுகள் 2-1 என்ற ஆதரவில் முடிவு எடுக்கப்பட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை வைத்துவரும் நிலையில், மோடி, அமித் ஷா தேர்தல் விதியை மீறிய விவகாரத்தில் முடிவு எடுப்பதில் தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோரா உள்ளார். சுஷில் சர்மா, அசோக் லவாசா ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக உள்ளனர். முக்கிய முடிவுகள் அனைத்தையும் மூன்று ஆணையர்களுமே சேர்ந்து எடுக்க வேண்டும். ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், பெரும்பான்மை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும். தற்போது தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

