Only two times per year can be seen - Andhra Minister

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆண்டுக்கு இரு முறை மட்டுமே தரிசனம் செய்யும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என் ஆந்திர மாநில அமைச்சர் கூறியுள்ளார். 

இது குறித்து அமைச்சர் மாணிக்கயால ராவ் கூறும்போது, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் தினமும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை பக்தர்கள் வந்து செல்கின்றனர். அரை மணி நேரத்தல் சாமி தரிசனம் செய்யக் கூடிய நிலை உள்ளது.

அது மட்டுமல்லாமல், ஒருவரே பல முறை தரிசனம் செய்து வருகின்றனர். நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்தால் சாமி தரிசனம் செய்து வைக்க முடியாமல் அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.

ஆதார் அட்டை மூலம் இணைத்து முதல் முறையாக வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து பின்னர், வாய்ப்பு இருந்ததால் கூடுதல் தரிசனத்துக்கு அனுமதிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு முறை ஏழுமலையானைத் தரிசித்துச் சென்ற பக்தர்கள், 6 மாதம் கழித்தே மீண்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

இதனை நடைமுறைக்கு கொண்டு வந்தால் பக்தர்கள் பயனடைவார்கள் என்றும் கூறினார். இது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளதாகவும் அமைச்சர் மாணிக்கயால ராவ் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த பேச்சை கேட்ட பக்தர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பொதுமக்களும், பக்தர்களும், அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.