Only 3 questions to answer the Prime Minister

நான் கேட்கும் மூன்று கேள்விகளுக்கு மட்டும் பதிலளிக்குமாறு பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் போது பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். இதற்கு பதிலடியாக காங்கிரஸ் கட்சியும் அதிரடி கொடுத்து கொண்டுதான் வருகிறது. 

இதனிடையே பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரபேல் விமானத்தின் விலை உள்பட அனைத்து விவகாரங்களும் வெளிப்படையானது என தெரிவித்திருந்தார். 

இதைதொடர்ந்து ரபேல் விமான ஒப்பந்தம் குறித்த தகவல்களை வெளியிடுவது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என குறிப்பிட்டார். 

நிர்மலா சீதாராமன் இவ்வாறு மாறிமாறி பேசுவது குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி 3 கேள்விகள் எழுப்பியுள்ளார். 

அதாவது, ரபேல் விமானத்தின் விலை என்ன?
அதன் பாதுகாப்பு குறித்து கேபினட் கமிட்டியிடம் ஆலோசிக்கப்பட்டதா?
இந்த ஒப்பந்தம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் லிமிட்டட் நிறுவனத்திடம் இருந்து பறிக்கப்பட்டு தொழிலதிபரிடம் ஒப்படைக்கப்பட்டது ஏன்?
இவ்வாறு கேள்விகள் எழுப்பியுள்ளார்.