one rupee note again coming to usage
கடந்த 2000 ஆண்டு வரை ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தது. பின்னர், நாணயங்கள் அதிகரிக்க தொடங்கியதும், படிப்படியாக ஒரு ரூபாய் நோட்டு குறைக்கப்பட்டது. பின்னர், 5 ரூபாய் நாணயம் வெளியானதும், ஒரு ரூபாய் நோட்டு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால், ஒரு ரூபாய் நோட்டை பார்ப்பதே பெரிய பொக்கிஷம் போல தோன்றுகிறது. இதையொட்டி கடந்த சில மாதங்களாக புதிய ஒரு ரூபாய் நோட்டு வெளியிடப்போவதாக மத்திய அரசு அறிவித்து வந்தது.

இந்நிலையில், புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்தில் விடப்படும் என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியாக உள்ள புதிய ஒரு ரூபாய் நோட்டில், மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கையொப்பம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வெளிவரும் ஒரு ரூபாய் நோட்டு, நாடு முழுவதும் புழக்கத்தில் விடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
