புதுச்சேரியின் தொழிலதிபர்களில் ஒருவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பிரமுகருமான தயாளன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு புதுவையில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சி 17 இடங்களில் போட்டியிட்டது.

அதேபோல், என்.ஆர். காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. அப்போது காமராஜர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டவர் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய சபாநாயகருமான வைத்தியலிங்கம்.

அந்தத் தேர்தலில் வைத்திலிங்கம் வெற்றி பெற்ற நிலையில் தோல்வியைத் தழுவினார் தயாளன். தொழிலதிபரான இவர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்ததும், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தயாளன் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.