Asianet News TamilAsianet News Tamil

டிராபிக் போலீசை காருடன் தரதரவென்று இழுத்துச் சென்ற போதை ஆசாமி! வைரல் வீடியோ!

போதையில் காரை இயக்கிய நபர் போக்குவரத்துக் காவலரை ஆபத்தான நிலையில் இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தை கமுக்கமாக வேடிக்கை பார்த்த ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவுகிறது.

On Camera, Haryana Traffic Cop Dragged By Drunk Driver, Video Viral sgb
Author
First Published Jun 22, 2024, 11:59 PM IST

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் போக்குவரத்து காவலர் ஒருவர் வேகமாக வந்த வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்தச் சம்பவம் பல்லப்கர் பேருந்து நிறுத்த பகுதியில் நடந்துள்ளது. இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரவ விட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் பற்றி காவல்துறையினர் அளித்துள்ள தகவலின்படி, வெள்ளிக்கிழமை மாலை, குடிபோதையில் இருந்த ஒருவர் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காகத் தனது காரை சாலையின் நடுவில் நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு செய்துள்ளார்.

நீட் சர்ச்சை எதிரொலி: தேசிய தேர்வு முகமையை ஒழுங்குபடுத்த வல்லுநர் குழு அமைத்தது மத்திய அரசு!

அப்போது ஒரு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் அந்த கார் டிரைவரை அணுகி, அவரது வாகன ஆவணங்களைக் கேட்டுள்ளார். பின், அவர் டிரைவரின் ஆவணங்களை பார்ப்பதற்காக காரின் கதவு வழியாக உள்ளே தலையே நீட்டிப் பார்த்துள்ளார். அந்த சமயத்தில் போதையில் இருந்த டிரைவர் திடீரென காரை இயக்கி வேகமாகச் சென்றார்.

இதனால், அந்த அதிகாரி காரில் சில மீட்டர்கள் தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். பொதுமக்கள் மற்றும் பிற போக்குவரத்து ஊழியர்கள் வாகனத்தை சுற்றிவளைத்து அதிகாரியை மீட்டனர். பின்னர், டிரைவரை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போதையில் காரை இயக்கிய நபர் போக்குவரத்துக் காவலரை ஆபத்தான நிலையில் இழுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தை கமுக்கமாக வேடிக்கை பார்த்த ஒருவர் எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவுகிறது.

ரயில்வேயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் உள்ளிட்ட சேவைகளுக்கு வரிவிலக்கு: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios