நாட்டில் மேலும் 5 பேருக்கு உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் புதிய வகை வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த மாதம் இத்தாலில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞருக்கும் அயர்லாந்தில் இருந்து ஆந்திரா வந்த 34 வயது நபருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒருவருக்கும் ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கும் , பிரிட்டனிலிருந்து கேரளாவின் கொச்சி வந்தவருக்கும் உருமாறிய புது வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 ஆம் தேதி ஓமைக்ரான் வகை வைரஸ் முதல் முறையாக கண்டறியப்பட்டது. உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பின்னர் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டது. நான்காவது அலையாக தென் ஆப்பிரிக்காவில் உருவெடுத்துள்ளா ஓமைக்ரான் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை உருமாறிய கொரோனா வைரஸ்களில் டெல்டா வகை வைரஸ் அதிக ஆபத்தானது என்று கூறப்படும் நிலையில் பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைவதாகவும் சொல்லப்படுகிறது. 32 முறை உருமாற்றமடைந்துள்ள இந்த வைரஸ் டெல்டா வைரஸ் விட வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. 

நாட்டில் முதல் முறையாக தென் ஆப்ரிக்காவில் பெங்களூரு வந்த 2 ஆண்களுக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யபட்டது. அதன் மூலம் இந்தியாவிற்குள் ஒமைக்ரான் வகை தொற்று நுழைந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் ஒமிக்ரான் பாதிப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. இதுவரை 17 பேருக்கு அங்கு ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டதையடுத்து மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜஸ்தான் 9, டெல்லி 2, குஜராத் 3 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் கடந்த மாதம் இத்தாலில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது இளைஞருக்கும் அயர்லாந்தில் இருந்து ஆந்திரா வந்த 34 வயது நபருக்கும் ஓமைக்ரான் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒருவருக்கும் ஆப்பிரிக்காவிலிருந்து கர்நாடகா வந்த ஒருவருக்கும் , பிரிட்டனிலிருந்து கேரளாவின் கொச்சி வந்தவருக்கும் உருமாறிய புது வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. 

அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டதையடுத்து தமிழகத்தில் உஷார்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.