Asianet News TamilAsianet News Tamil

பாதிப்பு 21 ஆக உயர்வு.. வேகமெடுக்கும் ஒமைக்ரான் ..! பதற்றத்தில் மக்கள்..!

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் , ராஜஸ்தானிலும் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதியானதால் நாட்டின் ஒமைக்ரான் பாதிப்புடையவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
 

Omicron Corona Alert
Author
India, First Published Dec 5, 2021, 9:06 PM IST

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 7 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியான நிலையில் , ராஜஸ்தானிலும் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு உறுதியானதால் நாட்டின் ஒமைக்ரான் பாதிப்புடையவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் வந்தவர்கள் உட்பட 7 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக, தெரிவித்த அம்மாநில சுகாதாரதுறையினர், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று திரும்பிய வந்த 4 பேருக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கும் என மொத்தம் 7 பேருக்கு ஒமைக்ரான் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவித்தார்.  

Omicron Corona Alert

முன்னதாக, கிழக்குஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் இருந்து டெல்லி வந்த நபருக்கு ஒமைக்ரான் கொரோனா பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரதுறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், டெல்லியில் முதல்முதலாக 37 வயதாக ஆண் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றிற்கு பாதிப்புக்குள்ளான நபர், மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவித்தார்.  மேலும் வெளிநாடுகளில் இருந்து டெல்லி விமானம் நிலையம் வந்தவர்களில் கொரோனா உறுதியான 17 பேரில் 12 பேரின் மாதிரிகள் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், அதில் தான்சானியாவில் இருந்து வந்த ஒருவருக்கு மட்டும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் வகை  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களுர் வந்த தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 66 வயதுடைய நபருக்கு முதல் முதலாக ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த நபர் நெகட்டிவ் சான்றிதழுடன் துபாய் சென்றுவிட்டு திரும்பிய நிலையில், அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. மேலும் பெங்களுரில் வெளிநாட்டிற்கு செல்லாத நிலையில், 46 வயதாக மருத்துவர் ஒருவருக்கும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

Omicron Corona Alert

இதை தொடர்ந்து நேற்று, ஜிம்பாப்வே நாட்டிலிருந்து இருந்து குஜராத்தின் ஜாம்நகர் திரும்பிய 72 வயதுடைய நபர் ஒருவருக்கும், அதேபோல் தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாராஷ்டிராவிற்கு திரும்பிய 33 வயதான நபருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தான்சானியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வைரஸ் பரவலை கட்டுபடுத்த, நாட்டில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் பரிசோதனையும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளிலும், விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானவர்களின் மாதிரிகளும் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்ப அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios