oldmung rum owner is death on 88 years old

‘ஓல்டு மங்க் ரம்’ உருவாக்கிய ‘பிரிகேடியர்’ கபில் மோகன் மாரடைப்பால் கடந்த 6-ந்தேதி மரணமடைந்தார். இவருக்கு வயது 88.

மதுப் பிரியர்களால் உலக அளவில் விரும்பி அருந்தப்படும் ‘ஓல்டு மங்க் ரம்’ மோகன் மியாகின்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர் தலைவராக இருந்தவர் கபில்மோகன்.

ராணுவத்தில் பிரிகேடியாராக கபில் மோகன் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மத்திய அரசு சார்பில்பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 1855ம் ஆண்டு எட்வார்ட் டையர் என்பவரால் மோகன் மியாகின் என்பவரால் முதன் முதலில்பிரிவரீஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மலையில் உள்ள கசாலிநகரில் உற்பத்தியாகும் நீர் மது, பீர் தயாரிக்க உகந்ததாக இருப்பதால் அங்கு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்தால் முதன் முதலில் ‘லயன் பீர்’ உருவாக்கப்பட்டது.

அதன்பின், கடந்த 1949ம் ஆண்டு, இந்த நிறுவனத்தை கபில் மோகனின் தந்தை என்.என். மோகன் என்பவர் வாங்கி நடத்தி வந்தார். தனது தந்தைக்கு பின் கபில் மோகன் இந்த நிறுவனத்தை நடத்த துவங்கியபின், கடந்த 1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந்தேதி ‘ஓல்டு மங்க் ரம்’ வகையை சந்தையில் இவர் அறிமுகப்படுத்தினார். 

அதன் பின் நாடுமுழுவதும் ‘ஓல்டு மங்க் ரம்’ மதுப்பிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று, சக்கைபோடு போட்டது. கபில் மோகன் தலைமை ஏற்றதற்கு பின் மோகன் மியாகின் நிறுவனம் ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனமாக உயர்ந்தது.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் நகரில் வசித்து வந்த கபில் மோகன் வயது மூப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், கடந்த 6-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கபில் மோகன் உயிரிழந்தார்.