Asianet News TamilAsianet News Tamil

ராமர் கோயிலுக்கு செல்லும் இந்துக்கள் முஸ்லிம்களாக வெளிவருவார்கள்: வைரலாகும் ஜாவேத் மியான்தத்தின் பழைய வீடியோ!

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் இந்துக்கள் முஸ்லிம்களாக வெளிவருவார்கள் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்தத் பேசிய பழைய வீடியோ வைரலாகி வருகிறது

Old video of former pak cricketer Javed Miandad says Hindus visiting Ayodhya Ram Temple will come out as muslims goes viral smp
Author
First Published Nov 17, 2023, 4:22 PM IST | Last Updated Nov 17, 2023, 4:22 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அடுத்த 2024ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி புதிய கோயில் திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும் எனவும், அன்றைய தினமே ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.

பிராமாண்ட ராமர் கோயில் திறப்புக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், கோயிலை இழிவுபடுத்தும் வீடியோக்கள் இணையத்தில் பரவத் தொடங்கியுள்ளன. அதில் ஒன்று, புதிய ராமர் கோயில் இந்துக்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வழிவகுக்கும் என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியான்தத் பேசிய வீடியோ.

“அயோத்தியில் ராமர் கோயிலுக்குச் செல்லும் இந்துக்கள் முஸ்லிம்களாக வெளிவருவார்கள். நமது நம்பிக்கை (இஸ்லாம்) நமது வேர்களுடன் இணைந்த இடங்களுக்குச் செல்பவர்கள் மீது அதன் ஒளியைப் பிரகாசிக்கும் என்பது எங்கள் உறுதியான நம்பிக்கை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் மோடி தவறு செய்திருக்கலாம். ஆனால் அது நமக்கு மறைமுகமாக பலனளிக்கும். முஸ்லிம்கள் மீண்டும் எழுச்சி பெறும் இடமாக இது இருக்கும். அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.” என்று அந்த விடியோவில் பேசும் ஜாவேத் மியான்தத் பேசியுள்ளார்.

 

 

ராமர் கோயிலின் வரலாற்று சிறப்புமிக்க பூமி பூஜை விழாவை தலைமையேற்று பிரதமர் மோடி நடத்தி முடித்த மூன்று நாட்களுக்குப் பிறகு, அதாவது கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி ஜாவேத் மியான்தத் தனது யூ-டியூப் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

டீப் ஃபேக் வீடியோக்கள் மிகப்பெரிய கவலை: பிரதமர் மோடி!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிராமாண்ட ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், ஜாவேத் மியான்தத்தின் பழைய வீடியோ சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios