Old rupees 4 arrest

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்த 4 பேர் கைது…முதல் நடவடிக்கையை தொடங்கியது மத்திய அரசு…

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடிவடிக்கையாக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அறிவித்தார்,

இதனைத் தொடர்ந்து பொது மக்கள் தங்களிடம் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற குவித்ததால் வங்கிகளில் கூட்டம் அலைமோதியது.

பணம் எடுத்த ஏடிஎம்களில் மக்கள் தவமிருந்தனர். அங்கு பணம் இல்லாததால் பொது மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இப்பிரச்சனையில் ரிசர்வ் வங்கி அறிவித்த 100 க்கும் மேற்பட்ட அறிவிப்புகளால் பொது மக்கள் குழம்பிப் போயினர்.

அதே நேரத்தில் 2016 டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்நிலையில் பழைய ரூ. 500, 1000 நோட்டுக்களை வைத்திருந்ததாக கிழக்கு டெல்லி, காசியாபாத் பகுதியை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவி்த்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 49 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய.500, 1000ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணத்தை எடுத்து செல்ல அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் என்ஆர்ஐ களுடன் தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

என்ஆர்ஐக்கள் தங்களிடம் இருக்கும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பரிமாற்றம் செய்ய ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அதைப் பயன்படுத்தி இந்த பணத்தை மாற்ற முயற்சித்திருபபதாக போலீசார் தெரிவித்தனர்.