பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள தகவல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை மாற்றியமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை பாஜக அரசு அமல்படுத்தியது. அதனை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மிதமான விலையில் இருக்கிறபோதும், நம் நாட்டில் பெட்ரோல் டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நவம்பர்-டிசம்பர் மாதங்களில் நடைபெறும் முக்கிய மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சந்தைப்படுத்தும் எண்ணெய் நிறுவனங்கள், லிட்டருக்கு ரூ.4-5 வரை குறைக்க வாய்ப்புள்ளாதாக தெரிகிறது.

எண்ணைய் நிறுவனங்களின் 2024ஆம் நிதியாண்டின் P/B மதிப்பீடுகள் நியாயமானதாகத் தோன்றினாலும், எரிபொருள் சந்தைப்படுத்தல் வணிகத்தின் வருவாயில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதால், பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான ஒபெக்+ வலுவான விலை நிர்ணயம், கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக JM ஃபைனான்சியல் இன்ஸ்டிடியூஷனல் செக்யூரிட்டீஸ் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், கச்சா எண்ணெய் விலையை பேரலுக்கு 80 டாலருக்கும் குறைவானதாக நிலைநிறுத்துவதில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன. மேலும், 2023 நிதியாண்டுக்கான எரிபொருளை மீட்டெடுப்பதில் அரசாங்கம் முழுமையாக ஈடுசெய்யும் எனவும் கூறப்படுகிறது.

எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் மதிப்பீடுகள் நியாயமானதாகத் தோன்றினாலும், தேர்தல்களின் போது கச்சா விலையின் அதிகரிப்பு, சந்தைப்படுத்துதலில் எண்ணெய் நிறுவனங்களின் வருவாய்க்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு அதிரடியாக இன்று வீழ்ச்சி; காரணம் இதுதான்!!

எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் பிரேக்-ஈவன் கச்சா எண்ணெய் விலையான பேரலுக்கு 85 அமெரிக்க டாலர்களுக்கு மேல் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலோ அல்லது எரிபொருள் விலை குறைப்பை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலையில் ஏற்றம் ஏற்பட்டாலோ எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் வருவாய்க்கு ஆபத்து ஏற்படலாம். ஆனால், தேர்தல் காலத்தில் எரிபொருள் விலைக் குறைப்பை மாற்றுவது சாத்தியமில்லை.

கச்சா விலையில் தலைகீழ் ஆபத்து இருந்தாலும், ப்ரெண்ட் கச்சா விலையை பேரலுக்கு 75-80 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் வைத்திருக்க ஒபெக்+ கூட்டமைப்பு ஒத்துழைப்பு தரும் என தாங்கள் நம்புவதாகவும், சவூதி அரேபியாவின் வலுவான விலை நிர்ணய சக்தியின் அடிப்படையில், இந்த விலையானது அவர்களின் முறிவு கச்சா விலையாகும் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், நவம்பர் முதல் டிசம்பர் வரையிலான முக்கிய மாநிலத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் முதல் பெட்ரோல்/டீசல் விலையை லிட்டருக்கு 4-5 ரூபாய் குறைக்கும்படி எண்ணெய் நிறுவனங்கள் கேட்கப்படலாம். 2024ஆம் நிதியாண்டு முதல் காலாண்டில் பெற்ற வலுவான லாபத்தை கடுத்தில் கொண்டு, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் இருப்புநிலை பெரும்பாலும் சரி செய்யப்பட்டு, பெட்ரோல்/டீசல் விலைகளைக் குறைக்க எண்ணெய் நிறுவனங்களை பெட்ரோலிய அமைச்சகம் கேட்கக்கூடும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.