ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துவமனை… மகளின் சடலத்தை 15 கி.மீ. தோளில் சுமந்து சென்ற தந்தை
ஒடிசா மாநிலத்தில், உயிரிழந்த 5-வயது மகளின் உடலை, அவரது தந்தை, 15 கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற அவல சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது.
Odisha மாநிலம் Angul மாவட்டத்தை சேர்ந்த Sumi Dhibar என்ற 5 வயது சிறுமி உடல் நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை வீட்டுக்கு எடுத்து செல்வதற்கு ஆம்புலன்ஸ் தர மருத்துவமனை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் வேறு வழியில்லாமல், தனது மகளின் உடலை தோளில் சுமந்தபடியே அவரது தந்தை நடந்தார். சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் அவர், தனது மகளின் உடலை சுமந்து சென்ற காட்சி, மனிதநேயத்திற்கே சவால்விடும் வகையில் இருந்தது.
ஒடிசா மாநிலத்தில், சில மாதங்களுக்கு முன்பு, உயிரிழந்த மனைவியின் உடலை அவரது கணவர் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு தோளில் சுமந்து சென்ற சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்றதொரு அவல சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:57 AM IST