ஒடிசாவில் நடன அசைவுகள் மூலம் போக்குவரத்து காவலர் ஒருவர் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். திரைப்படத்தில் ரஜினிகாந்த் போக்குவரத்தை சரி செய்வது போல காட்சிகள் இடம் பெற்றிருந்தது. 

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்தவர் போக்குவரத்து காவலர் பிரதாப் சந்த்ர கண்ட்வால், தனக்கே உரித்தான நடன அசைவுகள் மூலம் அப்பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வருகிறார். அனைவரைப் போல் இவரும் சாதாரணமாக வேலை செய்யாமல் புதுவிதமாக போக்குவரத்தை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 

குறிப்பாக பாம்பு போல கைகளை வளைத்து வளைத்து போக்குவரத்தினை அவர் கட்டுப்படுத்தும் விதம் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து செல்கின்றனர். 

இது பற்றி பிரதாப் சந்த்ர கண்ட்வால் கூறுகையில் நான் சொல்ல நினைக்கும் விசயங்களை என் நடன அசைவுகள் மூலம் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். என் ஸ்டைலால் மக்கள் ஈர்க்கப்பட்டு போக்குவரத்தை மதித்துச் செல்கின்றனர் என்றார். இந்த நடனம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு பிரதாப் சந்த்ர கண்ட்வால் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.