Asianet News TamilAsianet News Tamil

திருப்பதி வெங்கடாஜலபதி விவரமானவர் தப்பித்தார்... ஒடிசா ஜெகந்நாதர் சிக்கிக்கொண்டார்..!

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியிலிருந்து சில மாதங்களுக்கு முன்புதான் திருமலை திருப்பதி கோயில் தேவஸ்தானம் தங்களின் ரூ.1,300 கோடி டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஒடிசாவில் இருக்கும் ஸ்ரீ பூரி ஜெகந்தார் கோயில் நிர்வாகம் டெபாசிட் தொகையை எடுக்காமல் சிக்கிக்கொண்டது.

Odisha govt over Jagannath Temple's Rs 592 crore fund in crisis-hit Yes Bank
Author
Odisha, First Published Mar 9, 2020, 6:27 PM IST

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியிலிருந்து சில மாதங்களுக்கு முன்புதான் திருமலை திருப்பதி கோயில் தேவஸ்தானம் தங்களின் ரூ.1,300 கோடி டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஒடிசாவில் இருக்கும் ஸ்ரீ பூரி ஜெகந்தார் கோயில் நிர்வாகம் டெபாசிட் தொகையை எடுக்காமல் சிக்கிக்கொண்டது.

தனியார் வங்கியான யெஸ் வங்கி, தற்போது கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ளது. வாராக்கடன் அதிகமாகி முதலீட்டாளர்களுக்குப் பணம் கொடுக்க முடியாத சூழலில்  யெஸ் வங்கியைத் தனது பொறுப்பில் ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டது. முதலீட்டாளர்களின் பணத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்த போதிலும் வங்கியில் இருந்து டெபாசிட் தாரர்கள் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும் எனக் கட்டுப்பாடு வைத்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சமும், கவலையும் சூழ்ந்துள்ளது.

Odisha govt over Jagannath Temple's Rs 592 crore fund in crisis-hit Yes Bank

இதுபோன்ற இக்கட்டான நிதி நெருக்கடிக்கு ெயஸ் வங்கி செல்லும் என உணர்ந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாகிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் யெஸ் வங்கியில் இருந்த ரூ.1,300 கோடி டெபாசிட்டை திரும்பப் பெற்றுள்ளார்கள். திருப்பதி தேவஸ்தானத்தின் தலைவரும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராக ஒய்வி சுப்பா ரெட்டி தொலைநோக்குப் பார்வையுடன் சிந்தித்து பணம் முழுவதையும் எடுக்கும்படி, நிர்வாகிகள் கூட்டத்தில் கூறியுள்ளார். 

Odisha govt over Jagannath Temple's Rs 592 crore fund in crisis-hit Yes Bank

அதன்படி தேவஸ்தானம் விரைவாகச் செயல்பட்டு ரூ.1,300 கோடி டெபாசிட்டை எடுத்துள்ளது.ஆனால், ஒடிசா மாநிலம், பூரியில் உள்ள ஸ்ரீ பூரி ஜெகந்தார்  கோயில் நிர்வாகம் யெஸ் வங்கியில் டெபாசிட் எடுக்காமல் சிக்கிக்கொண்டது. ஸ்ரீ பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகம் யெஸ் வங்கியில் ரூ.547 கோடி டெபாசிட் செய்த நிலையில் இப்போது பணத்தை எடுக்க முடியாமல் சிக்கலில் இருக்கிறது. ஏற்கெனவே யெஸ்வங்கி  ரூ.47 கோடியைப் பூரி ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்துக்கு அளித்துள்ளது.

Odisha govt over Jagannath Temple's Rs 592 crore fund in crisis-hit Yes Bank

மீதமுள்ள பணத்தை மார்ச் 19-ம் தேதி, 23-ம் தேதி, மற்றும் 29-ம் தேதி ஆகிய தேதிகளில் மூன்று தவணைகளாகப் பிரித்துத் தந்துவிடுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், இப்போது  ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் வங்கி வந்துவிட்டதால், ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்துக்கு உரிய தேதியில் டெபாசிட் தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios